புளியங்கும் புரட்சி விளையாட்டுக்கழக மைதானத்தில் குடிநீர் வசதி திட்டம் அங்குரார்ப்பணம்.
புளியங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட அமர்களான விசுவலிங்கம் பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் தவராணி ஆகியோர்களது நினைவு நாளை முன்னிட்டு அவர்களது செல்வப்புதல்வன் வைத்தியகலாநிதி பா.விஜயதீபன் (MD) சுவிஸ் அவர்களது குடும்பத்தின் நிதிப்பங்களிப்பினூடாக வன்னி மண் நற்பணி மன்றமானது புளியங்கும் புரட்சி விளையாட்டுக்கழக மைதானத்தில் குடிநீர் வசதியினை ஏற்படுத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியிருந்தது.
மேற்படி குடிநீர் திட்டம் நேற்றைய தினம்(28)உத்தியோகபூர்வமாக கழக மற்றும் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வைத்தியகலாநிதி பா.விஜயதீபன் (MD) சுவிஸ்,வன்னி மண் நற்பணி மன்றத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் ஆர்.ஆரிஸ்தா, உறுப்பினர் எஸ்.மேகலா, வன்னி மண் நற்பணி மன்றத்தின் வவுனியா வடக்கு பணிப்பாளர் கு.நவஜீவன் அமரர்களான விசுவலிங்கம் பாலசுப்பிரமணியம், பாலசுப்பிரமணியம் தவராணி ஆகியோரது உறவினர்கள் மற்றும் புரட்சி வீரர்கள்,பிரதேச வாழ் மக்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் வன்னி மண் நற்பணி மன்றத்தினரால் மாணவர்களுக்கான புத்தகப்பொதிகளும் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment