காதல் விவகாரத்தால் இரு மாணவர்களுக்கிடையில் கத்திக் குத்து.
மாத்தளையில் பிரபல பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்கும் மாணவர்கள் இருவர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காதல் தொடர்பு காரணமாக இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்தியால் குத்தியதாக கூறப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் இருவரது கழுத்து மற்றும் தலை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியுடனான காதல் தொடர்பு காரணமாக இந்த கத்திக்குத்து இடம்பெற்றுதாக ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான மாணவர் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Post a Comment