Header Ads

test

தங்க நகைக்காக குடும்பஸ்தரை கொலை செய்த திருடர்கள்.

 கொழும்பில் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மாலபே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாஹேன பிரதேசத்திலுள்ளில் வீட்டில் மனைவியை கட்டி வைத்த கொள்ளையர்கள், கணவனை கொலை செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர் 80 வயதுடையவராகும். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று (16) காலை சீதுவ, முகலங்கமுவ பிரதேசத்தில் வீடொன்றில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு தங்க நகைகள் திருடப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments