Header Ads

test

பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்.

இளவாலை பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸாரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வலி தென்மேற்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் சிப்ரிகோ மற்றும் அவரது சகோதரி அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பொலிஸ் நேற்று விசாரணைக்கு அழைத்ததாக பிரதேச சபை உறுப்பினர் வழங்கிய தகவலையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிகோ மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

ஜிப்ரிகோவின் ஆடைகள் கிழிந்ததுடன் நடக்க முடியாத நிலையில் காணப்பட்டார். அவரது சகோதரி மயக்கமடைந்த நிலையில் அவர்களை அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். இருவரும் தற்போது தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர் ஒருவர் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரிகோவின் வீட்டை முற்றுகையிட்டு அவரைத் தாக்கியதாகவும் கத்தியால் குத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தன்னை தாக்கியதாக கூறப்படும் நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினரும் அவரது சகோதரியும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று அழைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


No comments