Header Ads

test

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள தொண்டர் ஆசிரியர்கள்.

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்றைய தினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின்முன் ஒன்று கூடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று நாங்கள் வடமாகாண கல்வி செயலாளரை சந்தித்து எங்களுடைய தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் குறித்து கேட்ட போது எங்களுக்கு அப்படி ஒரு நியமனம் இல்லை என்றும் முற்று முழுதாக மறுக்கப்பட்டுவிட்டது. என்ற பதிலை எங்களுக்கு அவர்கள் தந்துள்ளார்கள்.

எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், காலம் கடந்து சென்று கொண்டிருக்கின்ற நிலையில் மேலும் காலம் தாழ்த்தாமல் உரிய நியமனங்களை எங்களுக்கு  வழங்குமாறு கோரியும்  தொண்டர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.  



No comments