Header Ads

test

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு விஜயம் செய்த பிரதமர் மகிந்த ராஜபக்ச.

 யுத்தம் காரணமாக மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று விஜயம் செய்துள்ளார்.

1950 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை 1990 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மூடப்பட்டது.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 08 ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் எஞ்சிய கட்டிடங்களை எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது.

எனினும் 80 வீதமான கட்டிடங்களைப் புனரமைத்து பயன்படுத்த முடியும் எனப் பிரதமரின் விஜயத்தின் போது தெரியவந்துள்ளது. அதன்படி காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை புனரமைக்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

பிரதமருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர் காமினி ஏகநாயக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.

Gallery

No comments