வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது நீக்கப்பட்ட விசேட அலுவலக செயற்திறன் முறையை மீளக் கொடு, பயணக்கொடுப்பனவு உட்பட அனைத்து கொடுப்பனவுகளையும் உயர்த்து, பட்டதாரிகளுக்கு உடன் பதவி உயர்வை வழங்கு, சம்பள முரண்பாடுகளை அகற்று, பட்டதாரிகளின் சம்பளத்தை உயர்த்துங்கள் போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை இதன் போது ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment