எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்.
அடுத்த 4 முதல் 5 மாதங்களில் இலங்கையில் இயங்கும் இந்திய எரிபொருள் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் எரிபொருட்களை விநியோகிக்கவுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெற்றோல், டீசல் மற்றும் ஜெட் எரிபொருள் ஆகியவை இதில் அடங்கும். இந்தியா ஏற்கனவே இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. இலங்கையை தளமாகக் கொண்ட லங்கா ஐஓசி நிறுவனம் அண்மையில் எரிபொருள் விலையை இரு மடங்காக உயர்த்தியுள்ளது.
எனினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் அதிகரிக்கவில்லை.
இந்திய நிறுவனத்தின் விநியோகத்தின் பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment