Header Ads

test

ரஷ்ய பிரஜை ஒருவர் இலங்கையில் சடலமாக மீட்பு.

 இரண்டு வார விடுமுறைக்காக ரஷ்யாவிலிருந்து இலங்கை வந்த ரஷ்ய பிரஜை ஒருவர் பெந்தோட்டை பரடைஸ் தீவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று குறித்த விடுதிக்கு முன்னால் உள்ள கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதான வான்கோவ் அயுர்ல் என்ற ரஷ்ய பிரஜை என தெரியவந்துள்ளது.

நேற்று (09) பிற்பகல் பெந்தோட்டையில் உள்ள குறித்த சுற்றுலா விடுதியில் தனது மனைவியுடன் தங்கியிருந்துள்ளார்.இந் நிலையில் நேற்று பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து  உயிரிழந்தவரின் சடலத்தின் பிரேதப் பரிசோதனை இன்று (10) நடைபெறவுள்ளதுடன் சடலம் அளுத்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


No comments