Header Ads

test

அணிஞ்சியன்குளம் த.க.வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் ஏற்படுத்திய புதிய திருப்பம்.

 முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட  அணிஞ்சியன்குளம் த.க.வித்தியாலயம் புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றுச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அணிஞ்சியன்குளம் த.க.வித்தியாலய மாணவர்கள் 51 பேர் பரீட்சையில் தோன்றியிருந்த நிலையில் 15 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது,

குறித்த பாடசாலையானது துணுக்காய் வலயத்தில் கஸ்டப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஆரம்ப கல்விப் பாடசாலையாகும்.இப் பாடசாலையில் 252 மாணவர்கள் கல்வி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், பரீட்சையில் தோற்றிய 46 மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளை அண்மித்துள்ளதுடன், பாடசாலை 90 வீத சித்தியையும் எட்டியுள்ளது.

அந்தவகையில் குறித்த பரீட்சையில்  தோற்றிய கி.அபிஷயா 181, ந.ஜஸ்மிகன் 180, சு.தரணிதன் 169, சு.அஸ்வின் 168, சி.ஜினித்தன் 166, சி.யருணிகா 163, இ.சதுர்சன் 162, ச.சஞ்சீபன் 161, கு.அபிர்ணா  160, ச.அகப்பிரியன் 159, சு.ஸ்ரிபன்ராஜ் 158, இ.கெளதமன் 156, க.மதுரா 152, கி.அக்ஷயா 151, ஞா.டிலக்சிகா 148 ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

இவ்வாறு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் சித்தியடைவதற்கு காரணமான அதிபர் ஆசிரியர்களை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments