Header Ads

test

சீனி இறக்குமதி தொடர்பில் வெளிவந்த தகவல்.

 சிகப்பு சீனி இறக்குமதி தொடர்பில் நிதி அமைச்சிடம் முக்கிய கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உடனடியாக சிகப்பு சீனியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு வர்த்தக அமைச்சு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை 30 முதல் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சீனி, பருப்பு, அரிசி ஆகியனவற்றின் விலைகள்  அதிகரித்துள்ளதாகவும் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.


No comments