இன்று காலை மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லே, இன்று (13) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்திலும், பிற்பகல் 2 மணியளவில் மன்னாரிலும் மாவட்ட செயலகங்களில் வைத்து மீனவர்களுக்கான நிவாரணப் பொதிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மீனவர்கள எதிர்நோக்கும் நெருக்கடி நிலைமையைக் கருத்தில்கொண்டு இந்திய அரசால் 5 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியிலான நிவாரணப் பொதிகள் இந்தியத் தூதுவரால் வழங்கிவைக்கப்படவுள்ளன.
இந்தப் பொதிகளில் யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு 600 பொதிகளும், மன்னார் மீனவர்களுக்கு 200 பொதிகளும் அனுமதிக்கப்பட்டபோதும் இந்தியத் தூதுவரின முன்னிலையில் இரு மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட தலா 30 மீனவர்களே அழைக்கப்பட்டுள்ளனர்.
எஞ்சியவை தொடர்பான ஏற்பாடுகளில் மன்னாரில் மேலும் 70 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment