Header Ads

test

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

 கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேரும், இந்தியாவிலிருந்து 50 பேரும் மாத்திரமே பங்கேற்க அனுமதிப்பது என்று இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா வருகிற மார்ச் 11 ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் கச்சத்தீவில் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்பவர்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குமாவட் தலைமையில் நடைபெற்றிருந்தது. 

இந்த கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி கார்த்திக் மற்றும் கடற்படை கடலோர காவல்படை, மீன்துறை, சுங்கத்துறை, உளவுத்துறை, அதிகாரிகளும் கடற்தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளும் பங்கு தந்தையரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் இரண்டு விசைப்படகுகளிலும், ஒரு நாட்டுப் படகில் 50 பக்தர்கள் சென்று கலந்து கொள்வது என முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

11ஆம் திகதி காலை 10 மணிக்கு ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து படகுகள் புறப்படும் என்றும் இந்த பயணத்தில் அனுமதிக்கப்படாத யாரும் செல்லக் கூடாது என்றும் இதனை உளவுத்துறையும், கடற்படையும் கண்காணிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அரசு விதித்துள்ள சட்ட விதிகளின்படி இங்கிருந்து செல்லும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery Gallery

No comments