மகிந்தவின் யாழ் வருகையை எதிர்த்து முன்னேடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாணத்திற்கான வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன் போது போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்,மஹிந்த ராஜபக்சவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து,பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு,அரசியல் கைதிகளை விடுதலை செய்,காணாமலாக்கப்பட்டோரை கண்டறிய சர்வதேச விசாரணை வேண்டும்,இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், கந்தரோடையில் புத்தர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டாதே, நாவற்குழி சிங்கள குடியேற்றத்தை தடுத்து நிறுத்து போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment