Header Ads

test

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிய மிதிவண்டிப் பயணம் பிரான்ஸை சென்றடைவு.

 இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழர் தாயகத்துக்கு நிரந்தர பாதுகாப்பு கோரியும் ஐரோப்பாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் மிதிவண்டிப் பயணம் நேற்று பதினாறாம் நாளில் சுவிஸ் நாட்டை அடைந்துள்ளது.

ஐ.நாவின் 49 வது மனித உரிமை பேரவை கூட்டத்தொடரினை முன்னிட்டு கடந்தமாதம் 16 ஆம் திகதியன்று பிரித்தானிய பிரதமர் வதிவிட முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்துடன் ஆரம்பமான இந்த மனித நேய மிதிவண்டிப் பயண அறவழிப்போராட்டம் 16 ஆவது நாளில் சுவிட்சர்லாந்துக்குள் பிரவேசித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழினப் படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வேண்டி நடத்தப்பட்டு வரும் இந்தப் பயணம் ஏற்கனவே பல நாடுகளை கடந்துள்ளது.

பல கவனயீர்ப்பு போராட்டங்கள் மற்றும் சந்திப்புக்களிலும் கலந்துகொண்டுள்ளது. இந்த நிலையில் நேற்று 16ஆம் நாள் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் மாலை 5 மணியளவில் பிரான்சில் இருந்து பாசல் மாநகரத்தின் ஊடாக சுவிட்சர்சலாந்துக்குள் நுழைந்துள்ளது.

முன்னதாக பிரான்சின் மூலுஸ் மாநகரசபையிலும் சந்திப்புகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments