ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
கிளிநொச்சி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் உழவு இயந்திரமும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டுள்ளது.
குறித்த சம்பவமானது கிளிநொச்சி புளியம்பொக்கனை ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் மற்றும் யாழிலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது இன்று அதிகாலை மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உழவு இயந்திரம் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டவேளை யாழில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்த கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதிய நிலையில் இரு வாகனங்களும் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
Post a Comment