Header Ads

test

பறங்கியாற்று பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் அதிரடி கைது.

 முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பறங்கியாற்று பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரு சாரதிகளும் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் நட்டாங்கண்டல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களின் இரு உழவு இயந்திரங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் குறித்த வழக்கு இன்றைய தினம் (16) மாங்குளம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  





No comments