Header Ads

test

இலங்கையின் மிகவும் வயதான பெண் மரணம்.

 இலங்கையின் மிகவும் வயதான பெண்ணாக கூறப்பட்டு வந்த, கன்கானமி கமகே டிங்கிஹாமி இன்று காலை (10) தனது 116ஆவது வயதில் காலமானார்.

1906 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி வெலிபிட்டிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்குரஸ்ஸ, அத்துரலிய பிரதேசத்தில் பிறந்த அவர் இமதுவ – கனங்கே கனங்கேவத்தையை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார்.

அவர் எம்.ஜி. டானோரிஸ் என்பவரை மணந்தார், அவர்களது வாழ்வாதாரம் விவசாயம் ஆகும். அவர் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளின் தாய் ஆவார்.

கடந்த ஆண்டு சர்வதேச முதியோர் தினத்தில் கௌரவிக்கப்பட்ட டிங்கி ஹாமி, 116 ஆண்டுகள் வாழும் பாக்கியம் பெற்றார்.

டிங்கி ஹாமியின் பூதவுடல் கனங்கேவத்தை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, அவரது இறுதிக்கிரியை நாளை பிற்பகல் அவர்களின் குடும்ப மயானத்தில் இடம்பெறவுள்ளது.


No comments