ஒட்டுசுட்டான் சிவன் ஆலயத்தில் இளைஞர்களுக்கிடையே மோதல்.
சிவராத்திரி நாளான 01.03.2022 அன்று இரவு முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிவன் ஆலய சிவராத்திர பெருவிழா நடைபெற்று வந்த வேளையில் இளைஞர்களுக்கிடையில் ஏற்றட்ட முறுகல் நிலை மோதலாக வலுப்பெற்று கைகலப்பாக மாறியுள்ளது.
இதன்போது தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் ஒட்டுசுட்டான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் போது துரிதமாக செயற்பட்ட ஒட்டுசுட்டான் பொலீஸ்நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நான்கு இளைஞர்களை கைதுசெய்துள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment