Header Ads

test

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட காரர்கள்.

 சோசலிச வாலிபர் சங்கத்தினால் இன்றைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலக முன்றலை அடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு கோசங்களை எழுப்பி வரும் நிலையில், விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும், கடந்த 15ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்ட நிலையில், போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 







No comments