தந்தையுடன் பிஸ்கட் வாங்க கடைக்குச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.
அம்பாறை – பள்ளிக்குடியிருப்பு பகுதியில் 11 வயது சிறுமியொருவரை தாக்கிய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்குடியிருப்பு பகுதியில் பிஸ்கட் பெற்றுத்தருவதாக சிறுமியின் தந்தை கடைக்கு அழைத்துச் சென்று, பிஸ்கட் பக்கெட் ஒன்றை திருடிக் கொடுத்துள்ள நிலையில், சிலர் சுற்றிவளைத்தமையினால் சிறுமியை தள்ளிவிட்டு, தந்தை தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த காட்சி கையடக்க தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாயிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன்,சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment