Header Ads

test

பேஸ்புக் காதலால் இரு சிறுமிகளுக்கு நேர்ந்த துயரம்.

 முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் காணாமல்போன இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வைத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சிறுமிகளில் ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் தொடர்பினை ஏற்படுத்தி நட்பாகியுள்ளார்.

இந்நிலையில், செங்கலடி இளைஞர் ஒருவர் சிறுமியினை அங்கு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் பேருந்தில் ஏறி செங்கலடிக்கு சென்றுள்ளார்.

செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிசென்று தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டு வந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றி சென்றுள்ளார்.

இதன்போது இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ். நகரப்பகுதியில் சுற்றி திரிந்த வேளையில் அழகு சாதன பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றில் பொருட்களை வாங்கிய வேளை நள்ளிரவாகியுள்ளது.

இந்நிலையில் இரண்டு சிறுமிகளுக்கும் உதவி செய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக் கொண்டு சென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளனர்.

நேற்று புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவரிடத்திலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


No comments