யாழில் அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து - நால்வருக்கு நேர்ந்த துயரம்.
திருநெல்வேலி - பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை (02-02-2022) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்து யாழ்ப்பாண மாவட்டம் திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகில் பலாலி வீதியில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, பட்டா ரக வாகனமும், மோட்டார் சைக்கிளுமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment