Header Ads

test

இன்று இடம்பெற்ற கோரவிபத்தில் பலியான பங்குத் தந்தை.

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மரதன்கடவல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

றத்மலை பகுதியிலிருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனமும் வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற காருமே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து இன்று (01) காலை 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-அன்புவழிபுரம் சதா சகாய மாதா ஆலய பங்குத் தந்தையான கனேஷபிள்ளை நிதிதாசன் (49வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கெப்பித்திகொள்ளாவ நீதவான் முன்னிலையில் முன்னிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலம் தற்போது ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை முடிவடைந்தவுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




No comments