காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் ஆடைகளின்றி சடலம் மீட்பு.
ஹோர்டன் சமவெளி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் ஆடைகளின்றிய நிலையில் தொங்கிய சடலமொன்று பட்டிபொல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முதல் மதுபானம் அருந்தியுள்ளதுடன், தான் அணிந்திருந்த சகல ஆடைகளையும் கழற்றி தீவைத்துக் கொழுத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
அதேவேளை தீ வைத்து எரியூட்டப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 அடி உயரமான மரத்தில் வயர் ஒன்றைப் பயன்படுத்தி உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் , மீட்கப்பட்ட சடலம் பிரதேச பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment