Header Ads

test

மட்டக்களப்பு மாநகரசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை.

அரசாங்கம் உள்ளுராட்சி சபைகள் அனைத்தையும் கலைத்துவிட்டு அவற்றின் நிர்வாக பொறுப்பினை வழங்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் சுபராஜ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெறும் குழப்ப நிலை காரணமாக மக்களுக்கு சேவையாற்ற முடியாத சூழ்நிலை காணப்படுவதனால் தான் மாநகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

நேற்றை மட்டக்களப்பு மாநகரசபையின் 58வது அமர்வு நடைபெற்றபோது பல்வேறு முரண்பாடுகளும், தகாத வார்த்தை பிரயோகங்களும் நடைபெற்றன.அதன்போது நான் மாநகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுகின்றேன் என்ற அறிவிப்பினை வெளியிட்டிருந்தேன்.

மட்டக்களப்பு மாநகரசபையில் கடந்த சில காலமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆணையாளர் –மாநகர முதல்வருக்கிடையிலான முரண்பாடுகளினால் மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை.அதனைவிட ஆணையாளருடன் இணைந்து செயற்பட்டால் மாநகர முதல்வர் அவர்களுக்கு எந்த வேலைத்திட்டத்தினையும் செய்வதில்லை.அதேபோன்று மாநகரசபையின் முதல்வருடன் இணைந்து செயற்பட்டால் அவர் தொடர்பான வேலைத்திட்டங்களை ஆணையாளர் தடுப்பதை கண்களுடாக காணமுடிகின்றது.

இவ்வாறான செயற்பாடுகளினால் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வரிசெலுத்தும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த மாதம் கூட உத்தியோகஸ்தர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது இவ்வாறான சபையில் இருக்க வேண்டுமா என்று சிந்தித்ததன் காரணமாக எனது பதவியை இராஜினாமா செய்கின்றேன்.

மட்டக்களப்பு மாநகரசபையில் மாதாந்தம் 38 உறுப்பினர்களுக்கும் 10 இலட்சம் ரூபா ஊதியமாக போகின்றது. இது மக்களின் வரிப்பணமாகும். இந்த நிதியை ஒரு கிராமத்திற்கு மாதாந்தம் பயன்படுத்தப்பட்டால் மத்திய அரசாங்கத்திடம் நிதி கோரத்தேவையில்லை.மக்களின் வரிப்பணத்திலேயே மாநகரத்தினை அழகுபடுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


No comments