Header Ads

test

அரச உத்தியோகத்தர்களுக்கு தலையிடியாக மாறியுள்ள மற்றொரு விடயம்.

 அரச நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சேமிப்பதன் ஊடகாக செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கையொன்றை பொது சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த சுற்றறிக்கையின் படி அரச நிறுவனங்களில் வளி சீராக்கிகளின் பாவனை கட்டுப்படுத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், அரச நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் மின்தூக்கி பாவனையை குறைத்து முடிந்தளவு படிக்கட்டுக்களை உபயோகிக்க வேண்டும் என்பதுடன், மின் தூக்கியில் ஒருவர் மாத்திரம் பயணிப்பதை தவிரத்து சுகாதார வழிகாட்டலுக்கு ஏற்ப  பயணிக்கக்கூடிய உச்ச நபர்களின் எண்ணிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


No comments