Header Ads

test

மட்டக்களப்பில் விவசாயி ஒருவர் சடலமாக மீட்பு.

 மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள ஈரக்குளம் வயல்பகுதில் கொட்டகை ஒன்றில் வேளாண்மையை காவல் காத்துவந்த விவசாயி ஒருவர் வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விவசாயி உயிரிழந்த நிலையில் சடலமாக நேற்று மீட்கப்;பட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஈரக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயியான 54 வயதுடைய பரசுராமன் ஆறுமுகம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயல் பகுதியில் உள்ள வேளாண்மை செய்கையை காட்டுமிருகங்களில் இருந்து பாதுகாப்பதற்காக சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து வயல்பகுதியில் அமைந்துள்ள கொட்டகைக்கு சென்ற நிலையில் திங்கட்கிழமை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து குடும்பத்தினர்  அவரை தேடியபோது கொட்டகையில் வெட்டுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடவியல் பிரிவு அழைக்கப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.


No comments