Header Ads

test

10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த இளைஞன் - தற்போது நிகழ்ந்த மகிழ்ச்சியான சம்பவம்.

 கண்டி, பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் பல நாட்களாக மனநலம் பாதிக்கட்டிருந்தநபரின் வாழ்க்கையை மாற்றிய இளைஞன்.

பெண் ஒருவர் காதலித்து விட்டு ஏமாற்றிச் சென்ற நிலையில் கடந்த 10 வருடங்களாக காதலிக்காக காத்திருந்த குறித்த இளைஞன் தற்போது தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவனான குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். என்றாவது ஒரு நாள் தனது காதலி கிடைப்பார் என்ற நம்பிக்கையிலேயே நீண்ட காலமாக பல்கலைக்கழக வாசலில் காத்திருந்துள்ளார்.

அதற்கமைய கொழும்பில் இருந்து பேராதனை சென்ற இளைஞன், மனநலம் பாதிக்கப்பட்ட நபருடன் உரையாடியுள்ளார்.

அவரை அழைத்து சென்று தலை முடியை வெட்டி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்த யூடியுப் பிரபலம், மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் பெற்றோரை தேடி அவர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதற்கமைய, பெற்றோர் அவரை மீண்டும் தங்களுடன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று அவரை குணப்படுத்துவதற்கும் யூடியுப் பிரபலம் உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


No comments