Header Ads

test

1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற இந்தியாவுடன் கைச்சாத்திட்ட பசில் ராஜபக்ச.

 இலங்கைக்கு இந்தியா அத்தியாவசியப் பொருட்களை பெற்றுகொள்வதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கியுள்ளது.

தமது ட்வீட்டர் பதிவின் ஊடாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.  

இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பசில் ராஜபக்ச இலங்கைக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்திய கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்காகவே இந்தியா சென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Gallery 

No comments