இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு.
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காங்கேயனோடை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேயனோடையில் இருவருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நபர் காத்தான்குடி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காங்கேயனோடை தடாகத்திற்கு அருகில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் காங்கேயனோடை பகுதியைச் சேர்ந்த 43 வயதான லெப்பை மொஹமட் இல்பான் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Post a Comment