Header Ads

test

தேசிய கராத்தே சுற்றுப்போட்டியில் சாதனை படைத்த தமிழ் இளைஞன்.

 இலங்கை போக்குவரத்து சபையினால் (CTB) போக்குவரத்து சபை ஊழியர்களுக்கான தேசிய கராத்தே சுற்றுப்போட்டி கடந்த 10 ஆம் திகதி இக்பாகமுவ குருணாகலில் நடைபெற்றது.

இதில் கிழக்கு பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திருகோணமலையில் இருந்து ஜப்பான் கராத்தே இதோசுகாய் இலங்கைக் கிளையின் கிழக்கு மாகாணத்துக்கான தலைமைப் பயிற்சியாசிரியர் இ. சத்தியராஜன் (பாதுகாப்பு பரிசோதகர்) 40 - 45 வயதுப்பிரிவில் Kata , Kumite, Overall Kumite ஆகிய மூன்று போட்டிகளிலும் முதலாம் இடங்களைப் பெற்றுள்ளார்.

அதோடு மூன்று போட்டிகளிலும் அவர்   தங்கப்பதக்கங்களை வென்று மாவட்டத்துக்கும், கழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதுமட்டுமல்லாது , அண்மையில் ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட நடுவர்களுக்கான (Kata Judge/ Kumite Referee) செயன்முறை மற்றும் எழுத்துத் தேர்விலும் சித்தியடைந்து திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரேயொரு கராத்தே பயிற்சி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 





No comments