மன்னார் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள கொவிட் தொற்று.
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மேலும் புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 17 நாட்களில் 400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (18) அவர் விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (17) மேலும் புதிதாக 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை 400 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் 601 தொற்றாளர்களும், மாவட்டத்தில் தற்போது வரை 3784 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்தோடு 39 கொரோனா மரணங்களும் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment