அமைச்சர் ஒருவர் பங்கேற்ற நிகழ்வில் ஏற்பட்ட பதற்றம்.
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கலந்து கொண்ட நிகழ்வொன்றில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த நிகழ்விற்கு பாதுகாப்பு வழங்கிய பாணந்துறை வடக்கு பொலிஸ் பொறுப்பதிகாரியின் கடமைகளுக்கு நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததன் காரணமாக இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது பாடகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் பொறுப்பதிகாரியின் முகக்கவசத்தை இவர் அகற்ற முற்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கூச்சலிட்டு அநாகரீகமாக நடந்துகொண்டபோது, பொலிஸார் சந்தேக நபரை எச்சரித்து, நிகழ்வினை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தினர்.
எனினும் இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரியின் முகக்கவவசத்தை இழுத்து ஆவேசமான முறையில் நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment