ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் வவுனியா சிறைச்சாலையில் கைதி ஒருவர் விடுதலை.
நாட்டின் 74 ஆவது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து மல்லாவி பகுதியினை சேர்ந்த 43 வயதுடைய கைதி ஒருவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 197 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 65 வயதிற்கு மேற்பட்ட கைதிகளில் தண்டனைக் காலத்தில் பாதியை நிறைவு செய்தவர்களும், 50 வயதுக்கு மேற்பட்ட கைதிகளில் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களும், சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment