கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்த பேராயர்.
கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு விஜயம் செய்தார்.
பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலயத்தின் மீதான குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளார்.
பொரளை அனைத்து புனிதர் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கின் பிரதான சந்தேகநபராக ஓய்வு பெற்ற வைத்திய அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் , முனி என்ற சந்தேக நபரின் இருப்பிடம் குறித்து விசாரிப்பதற்காக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் பல ஆயர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு இன்று சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment