Header Ads

test

இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக முதலாவது குடும்ப சுகாதாரப் பணியாளர் உயிரிழப்பு.

 இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக முதலாவது குடும்ப சுகாதாரப் பணியாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர் பொலநறுவை, ஜயந்திபுர பகுதியை சேர்ந்த 41 வயதான புஷ்பா குமாரி விஜேரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காய்ச்சல், தடுமன் ஏற்பட்ட போதிலும் PCR பரிசோதனை செய்து கொள்வதற்கான வசதிகள் அரச மருத்துவமனையில் இல்லாமையினால் தனியார் மருத்துவமனையில் செய்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 அவருக்கு கொரோனா சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

தற்போது நாட்டில் பாரிய அளவிலான சுகாதார பணியாளர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 



No comments