மருமகனின் தாக்குதலில் உயிரிழந்த மாமனார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகன் தாக்கி மாமனார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹோ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகொல்லாகம பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக மருமகன் தனது மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்துள்ளார். சம்பவத்தில் பலகொலகம - பலல்ல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் இன்று மாஹோ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மாஹோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment