Header Ads

test

இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டித்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்.

   இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்டித்து யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில்   கறுப்பு வர்ண துணி கட்டி, இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளை சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முள்ளிவாய்க்காலில் சிவில் சமூகங்களால் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமுகமாக பல்கலைகழக மாணவர்கள் அங்கு செல்வதற்காக பல்கலைகழகத்தில் தமது வாகனங்களை தரித்துவிட்டு உள்ளே செல்ல முற்பட்ட நிலையில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

அதோடு யாழ் பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்வதற்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என கொடியேற்றுகிறீர்கள் ஆனால் பல்கலைகழகத்திற்குள் மாணவர்கள், ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே தாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து மாணவர்களால் கறுப்பு வர்ண துணியை பல்கலைகழக பிரதான வாயிலில் கட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments