Header Ads

test

உலக சாதனை படைத்துள்ள மற்றுமொரு தமிழர்.

 இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நந்தகுமார்.

இவர் பொறியியல் படிப்பு முடித்தவுடன் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சொந்தமாக நிறுவனம் ஒன்று தொடங்க திட்டமிட்டு லண்டனில் 'Kovaion' என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனம் லண்டனில் மட்டும் இல்லாமல் சென்னை, பெங்களூர், அமெரிக்கா என பல கிளைகளை கொண்டுள்ளது. இதுகுறித்து நந்தகுமார் கூறுகையில்,

2011ஆம் ஆண்டு தனியாக தொழில் தொடங்க எண்ணி Kovaion நிறுவனத்தை தொடங்கினேன். ஆரம்ப காலத்தில் தனி ஒருவராக செயல்பட்ட நான், ஒரு வருடத்திற்கு பிறகு படிப்படியாக தொழிலாளிகளை உயர்த்தினேன்.

ஆரக்கிள் நிறுவனத்தின் சாப்ட்வேர் பல நிறுவனங்களுக்கும் தேவைப்படும். அப்படிப்பட்ட நிறுவனங்களை கண்டுபிடித்து customize செய்வது தான் எங்களுடைய முதற்கட்ட பணி. ஆரம்பத்தில் ஒரிரு நிறுவனங்களுக்கு மட்டுமே சேவைகள் வழங்கி வந்த நிலையில் தற்போது 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் எங்கள் நிறுவனத்தை தேடி வருகின்றனர்.

முதலில் புதிய நிறுவனமாக இருந்ததால் கொஞ்சம் நம்பிக்கை சார்ந்த பிரச்சினை இருந்தது. ஆனால் அதன் பிறகு எங்கள் எண்ணம் முற்றிலுமாக மாற தொடங்கி நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இருந்தது.

அந்தவகையில் Kovaion தொடங்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 50 சதவீத வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஆண்டு வருமானம் 3 மில்லியன் பவுண்ட்ஸ்களுக்கு மேல் கிடைப்பதாக நந்தகுமார் தெரிவித்தார்.

இந்நிலையில்  இந்தியாவின் சிறிய கிராமத்தில் பிறந்து, சர்வதேச அளவில் பிரபல தொழில் அதிபராக Nandakumar  உயர்ந்துள்ளமையானது தமிழத்துக்கு பெருமையை தேடிக்கொடுத்துள்ளது.  




No comments