Header Ads

test

கொலையில் முடிந்த பதின்ம வயது மாணவியின் காதல்.

 திருகோணமலையில், 15 வயதான பாடசாலை மாணவியை, 17 வயதான இளைஞன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பெப்ரவரி முதலாம் திகதிதிருகோணமலை மாவட்டத்தின், கந்தளாய் பொலிஸ் பிரிவிலுள்ள அக்போபுர, பெரமடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

 கவீஷா என்ற குறித்த மாணவி அப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்று வந்துள்ளார். தந்தை பத்திரன, மேசன் தொழிலாளி என்பதால் சம்பவம் இடம்பெற்ற அன்று, அவர் கட்டுமான வேலைகளிற்காக அருகிலுள்ள மெதிரிகிரியவிற்கு சென்றுள்ளார். வீட்டில் கவீஷாவும்,அவரது தாயாரும் மட்டுமே தங்கியிருந்தனர்.

அப்போது வீட்டிற்கு வெளியே ஏதோ நிழலாடுவதை உணர்ந்து, தாயும் மகளும் வெளியே சென்றனர். அங்கு யாரையும் காணாத நிலையில் ஏதோ பிரமையென நினைத்துக் கொண்டு, இருவரும் வீட்டின் முன்பக்கத்திற்கு திரும்பியபோது கவீஷா மட்டும் வீட்டின் முன்வாசலிற்கு சென்றுள்ளார்.

குறித்த மாணவி சென்ற சிறிது நேரத்தில் அலறல் சத்தம் கேட்டதும்,தாயார் வீட்டின் முன்பகுதிக்கு ஓடிச் சென்றபோது வீட்டிற்குள்ளிருந்து இளைஞன் ஒருவர் தப்பி வெளியே ஓடியுள்ளார்.

அம் மாணவியின் அவலக்குரலை கேட்டு அயலவர்கள் ஒன்று திரண்டதுடன் கவீஷாவை கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.வைத்தியசாலையில் நான்கு மணித்தியால அறுவை சிகிச்சை இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் கடந்த  4ஆம் திகதி  கவிஷாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து,கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.போகும் வழியில் தம்புள்ளையை அண்மித்த போது கவீஷாவின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, 6ஆம் திகதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த மாணவியை தாக்கிய சமீரவிற்கும், கவீஷாவிற்கும் காதல் ஏற்பட்டு சில மாதங்களிலேயே அவர்களிற்குள் பிரிவு ஏற்பட்ட நிலையில் அதுவே கொலையில் முடிந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.  

மேலும்  மாணவியை கொலை செய்த சமீர பொலிசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


No comments