Header Ads

test

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு காத்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி.

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றது.

தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது. 

தங்கத்தின் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

தங்கம் விலையை போலவே, வெள்ளி விலை சற்று சரிவிலேயே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு சற்று குறைந்து, 22.837 டாலராக காணப்படுகின்றது. 

அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்காவின் விவசாயம் அல்லாத பே ரோல் சம்பந்தமான தரவானது வெளியாகவுள்ளது.

இது தங்கத்தின் விலையில் பிரதிபலிக்கலாம் எனவும், மேலும் நிதி சந்தைகளானது தொடர்ந்து ஏற்றம் காணலாமென எதிபார்க்கப்படுகின்றது.


No comments