ஜெனிவா பிரதிநிதிகளை சந்தித்துள்ள இலங்கை பிரதிநிகள்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமண ஆகியோர் இன்று ஜெனிவா பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்.
ஜெனீவாவில் உள்ள இலங்கை தூதரகத்தில் குளோபல் ஸ்ரீலங்கா மன்றம் மற்றும் ஐரோப்பாவிலுள்ள இலங்கை அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்தனர்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை கூட்டத்திற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைக்கு எதிரான ஜெனிவா பிரேரணை தொடர்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் குறித்து கருத்து தெரிவிக்க இலங்கை அரசின் சார்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் ஜெனீவா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment