நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
கொஸ்லந்த கெலிபனாவெல பிரதேசத்தில் 12 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொஸ்லந்த கெலிபனாவெல பிரதேசத்தில் உள்ள பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பலத்த காயங்களுக்குள்ளான சிறுவன் சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 21 வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment