கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவி திடீர் மாயம்.
கொழும்பு கல்கிசை - பீரிஸ் வீதிப் பகுதியில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பம்பலப்பிட்டியிலுள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 வயதுடைய யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
கடந்த 13ஆ திகதி முதல் குறித்த மாணவி காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் நிலையில் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
Post a Comment