நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.
கொரோனா தொற்று உறுதியான மேலும் 996 நோயாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 646,034ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 20,888 நோயாளர்கள் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 205 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 608,924ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment