கம்பளையில் காணாமல் போன சிறுமி நீர்கொழும்பில் கண்டுபிடிப்பு.
கம்பளையில் காணாமல் போனதாக கூறப்பட்ட 12 வயதான சிறுமி நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியைக் காணவில்லை என, கம்பளை மற்றும் கலஹா பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. உறவினர் வீட்டிற்கு சென்ற போதே, குறித்த சிறுமி இவ்வாறு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 7 ஆம் திகதி இரவு, தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த போதே,சிறுமி காணாமல் போனமை தெரியவந்ததையடுத்து, சிறுமியை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விரைந்து செயற்பட்ட பொலிஸார், பொலிஸ் நாயின் உதவியுடன் சிறுமியை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்த நிலையில், நேற்று இரவு சிறுமி நீர்கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment