Header Ads

test

வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது தாக்குதல்.

 வவுனியா சதொச விற்பனை நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர் மீது அங்கு கடமையில் இருந்த உத்தியோகத்தர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வவுனியா நகர்ப்பகுதியில் உள்ள சதொச விற்பனை நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்ய சென்ற வாடிக்கையாளர் ஒருவர்அங்குள்ள பொருட்களின் விலைகள் தொடர்பில் கடமையில் இருந்த ஊழியரிடம் கேட்டுள்ளார்.

இதன்போது ஊழியருக்கும் வாடிக்கையாளருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் ஊழியர் வாடிக்கையாளர் மீது தாக்கியுள்ளார்.

இதன் காரணமாக வாடிக்கையாளரின் கால் பகுதியில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments