Header Ads

test

முச்சக்கரவண்டியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நபர்.

 பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றின் பின்புற ஆசனத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த நபர் 40 அல்லது 45 வயது மதிக்கத்தக்க ஆணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பெந்தோட்டை கடற்கரைக்கு அருகில் ரயில் பாதைக்கு அண்மையில் உள்ள காட்டுப் பகுதியில் இந்த முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் இனம் காணப்படாத நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


No comments