Header Ads

test

சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமுற்றதால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

 வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொண்டிருந்த பலர் மயக்கமடைந்ததனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாட்டின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வின் அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்த மாணவர்கள் மற்றும் ஊர்காவற்படை வீரர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து விழுந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அவர்களுக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டதன் பின்னர் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்றது .

இந்நிலையில் அதிக நேரம் வெயிலில் நின்றுக்கொண்டு இருந்தமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 






No comments